கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு | Lawsuit seeks publication of government order related to funds assets of temples

1380251
Spread the love

சென்னை: கோ​யில்​கள், மடங்​களி்ன் நிதி, சொத்​துகள் தொடர்​பான அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​கள் ஆகிய​வற்றை அறநிலை​யத் துறை இணை​யதளத்​தில் உடனுக்​குடன் பதிவேற்​றம் செய்யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலை​யத் துறை பதில் அளிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் மயி​லாப்​பூர் டி.ஆர்​. ரமேஷ், தாக்​கல் செய்த மனு​: தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​படி அரசுத் துறை​களின் அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​களை அனை​வரும் தெரிந்து கொள்​ளும் வகை​யில் அரசு இணை​யதளங்​களில் வெளிப்​படை​யாக கட்​டா​யம் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். ஆனால், இந்து சமய அறநிலை​யத் துறை​யின் இணை​யதளத்​தில் கடந்த 2022-ம் ஆண்​டுக்​குப் பிறகு எந்​தவொரு தகவலும் புதி​தாக பதிவேற்​றம் செய்​யப்​பட​வில்​லை.

அறநிலை​யத் துறை நிர்​வாகத்​தின் அன்​றாட செயல்​பாடு​கள், துறை ஆணை​யர் வசம் உள்ள பொதுநல நிதி குறித்து எந்த தகவலும் வெளிப்​படை​யாக தெரிவிப்​ப​தில்​லை.

எனவே, கோயில்​கள், மடங்​கள், இந்து மத கட்​டளை​களின் நிதி, சொத்​துகள் தொடர்​பான அறநிலை​யத் துறை​யின் அர சாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​ம​திக்​கான உத்​தர​வு​களை பொது​வெளி​யில் அனை​வரும் உடனே அறிந்து கொள்​ளும் வகை​யில், அறநிலை​யத் துறை​யின் இணை​யதளத்​தில் கட்​டா​யம் பதிவேற்​றம் செய்​யு​மாறு உத்​தர​விட வேண்​டும். அது​வரை, டெண்​டர் உள்​ளிட்ட எந்த பணி​களை​யும் இறுதி செய்​ய தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார்.

நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்பு இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாதன், அறநிலை​யத் துறை தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.ர​விச்​சந்​திரன், மாநில தகவல் ஆணை​யம் தரப்​பில் வழக்​கறிஞர் விக்​னேஸ்​வரன் ஆஜராகி வாதிட்​டனர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி இதுதொடர்​பாக தமிழக அரசும் அறநிலை​யத் துறையும் பதில் அளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை அக்​.29-க்கு தள்​ளி​வைத்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *