விராட் கோலியை தோனி காரில் அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.