“கோழைத்தனமான வன்முறை” – ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம் | TVK vijay condemns Pahalgam terror attack

1359078.jpg
Spread the love

ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது தொடர்பாக அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *