கோவாநைட் கிளப் பார்ட்னர்கள் தாய்லாந்து ஓட்டம்:தப்பிக்க டெல்லி ஹாஸ்பிடலில் சேர்ந்த 3வதுபார்ட்னர் கைது | Goa nightclub partners flee to Thailand: 3rd partner arrested after fleeing to Delhi hospital

Spread the love

பொய் காரணம் கூறி மருத்துவமனையில் சேர்ந்த குப்தா

இதையடுத்து அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. டெல்லி போலீஸாரும், கோவா போலீஸாரும் சேர்ந்து அவரை தேடிக்கொண்டிருந்தனர்.

டெல்லியில் அஜய் குப்தா அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். மொபைல் போனையும் மிகவும் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்தினார். இதனால் அவரை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

கடைசியாக அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, டெல்லி ரஜ்பத் நகரில் உள்ள மூளை மற்றும் முதுகுதண்டு மருத்துவமனையில் சென்று, தனக்கு முதுகுதண்டில் பிரச்சனை உள்ளது என்று கூறி சேர்ந்து கொண்டார்.

அவர் இருக்கும் இடம் தெரிந்தவுடன் டெல்லி போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் பொய்யான காரணம் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தீ விபத்து ஏற்பட்ட கிளப்

தீ விபத்து ஏற்பட்ட கிளப்

3 முதல் 4 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொண்டு ஜாமீன் கேட்பது போன்ற திட்டங்களில் ஈடுபடலாம் என்று அஜய் நினைத்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அஜய் குப்தாவை கைது செய்து போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரித்தபோது, “நான் நைட்க்ளப்பில் பிஸ்னஸ் பார்ட்னர்; நைட்க்ளப் ஆபரேஷனில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவரை அங்கிருந்து கோவாவிற்கு கொண்டு செல்ல கோவா போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நைட் க்ளப் ஊழியர்கள் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் லுத்ரா சகோதரர்கள் இருவரும் டெல்லியில் ஒரே முகவரியில் 42 கம்பெனிகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *