கோவா: திடீரென பற்றிய தீ: கண்டுகொள்ளாத கொண்டாட்ட மனநிலை; 25 உயிர்கள் பலி! – என்ன நடந்தது? | Goa: Sudden Fire: Unexpected celebratory mood; 25 lives lost! – What happened?

Spread the love

கோவாவின் ஆர்போராவில் உள்ள “பிர்ச் பை ரோமியோ லேனில்’ நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

திடீரென தீ மளமளவெனப் பரவியது. அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விபத்தின் தீவிரத் தன்மை புரிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் தப்பிக்க ஓடியதில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதில், “தீ விபத்து ஏற்பட்ட பிறகு, குறுகிய வாசல்தான் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. பலர் தப்பியோடிய நிலையில், சில சுற்றுலாப் பயணிகள் கீழே உள்ள சமையலறைக்கு ஓடி, அங்கு ஊழியர்களுடன் சிக்கிக் கொண்டனர். குறுகிய வாசல் மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *