கோவா: நைட் கிளப்பில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு என்ன நடந்தது?|Goa Night Club accident – What happened?

Spread the love

நேற்று நள்ளிரவு, கோவா ஆர்போராவில் உள்ள ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 22 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

சிலிண்டர் வெடித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தக் கிளப்பின் பேஸ்மென்ட் பகுதியில் பணிபுரிந்து வந்தவர்கள்.

அதிகாரிகள் கூறும் தகவலின்படி, இந்த விபத்தில் மூன்று பேர் மட்டுமே தீயில் எரிந்து இறந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் மூச்சு திணறலால் இறந்துள்ளனர்.

விபத்து நடந்த கிளப்

விபத்து நடந்த கிளப்

விபத்து ஏற்பட்ட கிளப்பை கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சவந்த் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். இந்த விபத்து விதிமீறல்களால் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.‌ இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க பிரமோத் சவந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை இந்த விபத்து விதிமீறல்களால் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்‌ இந்திய பிரதமர் மோடி. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *