கோவையில் அக்.24-ல் கல்லூரி மாணவ – மாணவியருக்கான கல்விக் கடன் முகாம் | Educational loan camp for college students on October 24 in Coimbatore

1329528.jpg
Spread the love

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள கற்பகம் உயர் கல்வி நிறுவன வளாகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ – மாணவியர் பயன்பெறும் வகையில் கல்விக் கடனுதவி வழங்கும் முகாம்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

அதன்படி, கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கல்விக் கடனுதவி முகாம் நடக்கிறது. மாணவ – மாணவியர் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *