கோயம்புத்தூர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(பிப். 25) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

இன்னொருபுறம், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகத் திரண்டு கறுப்புக்கொடி காட்டியதுடன் ‘கோ பேக் அமித் ஷா’ வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.