கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது.
கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம், கடும் பனி மூட்டம் காரணமாக, தரையிறங்க முடியாமல் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கியது.