பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு அடுத்த நாளே, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நேற்று நடைபெற்றது.

இதில் அதிமுக மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள்.

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார். அதில், “முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.’ என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உடனிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் கோவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.