கோவை: கோவையில் வைரல் காய்ச்சலால் 7 வயது மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி வக்தசலா ஆகியோர் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2 -ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அறையைக் காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை. மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்தது கிடந்துள்ளனர்.