கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.