கோவையில் 17.17 ஏக்கரில் ஐடி வளாகம், சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | IT campus on 17.17 acres in Coimbatore, Rs 200 crore to improve roads says mk stalin

1336207.jpg
Spread the love

கோவை: கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்திட ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், அவிநாசி சாலை மேம்பாலம் மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிப்பு, கோவை டைடல் பார்க் அருகிலேயே 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடி மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமானப் பணியை இன்று (நவ.06) தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், கோவைக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கோவை டைடல் பார்க் அருகிலேயே, 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். கலைஞரால் சென்னையில் அமைக்கப்பட்ட ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தை போன்றே, கோவையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று மில்லியன் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள, இத்தகவல் தொழில்நுட்ப வளாகம் கோவை மாநகரின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.

அவிநாசி சாலையில் கடந்தாட்சியில் தொடங்கப்பட்டு தொய்வாக நடைபெற்ற உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (கோல்டுவின்ஸ்) வரையிலான உயர்மட்டப் பாலம் பணிகள் முடுக்கி விடப்படுவதுடன், கோரிக்கையை ஏற்று, சின்னியம்பாளையம் (கோல்டு வின்ஸ்) முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.600 கோடி செலவில் இந்த உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிக்கப்படும். தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், பயிர் சேதங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் ரூ.7 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.26 கோடி செலவில் மேம்படுத்தப்படும். பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.51 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

எனது ஆய்வுகளின் போது, என்னை சந்தித்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள சாலைகள், பாதாள சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மண் சாலைகள், இவற்றையெல்லாம் தரமான தார்சாலைகளாக மேம்படுத்திட ரூ.200 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்” என்று அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *