சுமார் 80 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராட்டினம் பழுதாகி நின்றுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பயத்தில் கதறி துடித்தனர். எவ்வளவு முயற்சித்தும் பழுது சரியாகவில்லை என்பதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிநவீன இயந்திரங்கள், வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
இரவுநேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினரின் தீவிர முயற்சியால் மக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர். ராட்டினத்தில் பயணம் செய்த 20 பேரும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கீழே வந்த பிறகு தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுதொடர்பாக மக்கள் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.