கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல’ கலைத் திருவிழா

Spread the love

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்”, தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம் ஹாலில் நடைபெற்ற இந்த விழா கலை, புகைப்படம், நாடகம், இலக்கியம், விவாதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது.

1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிந்தனை மன்றம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சமூகப் பிரச்னைகள், முக்கிய நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் மேடையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் கலைத் திருவிழா, மாணவர்களின் பன்முகத் திறன்களைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

மாணவி ஐஸ்வர்யா

மாணவி ஐஸ்வர்யா

விழாவின் நுழைவிடத்தில் வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் விருப்பத்தின்பேரில், ஃபேஸ் பெயின்ட்டிங் செய்யப்பட்டது. ஹால் முழுவதும் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முனைவர் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி ஐஸ்வர்யாவின் அழகிய வரைபடங்கள் தனியாக ஒரு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

முதல் நாள் (பிப்ரவரி 12) காலை அமர்வில், புகைப்படக் கலைஞர் பாலாஜி மகேஸ்வர் சிறப்புரை ஆற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்னர், புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் போட்டோகிராபராக மாறிய அவர், உலகின் முதல் புகைப்படம், முதல் மனித உருவப் புகைப்படம், ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *