கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

dinamani2F2025 09 102Fsba8fqve2F202508213487943
Spread the love

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையினுள் அழைத்துச் செல்ல தனது தந்தைக்காக சக்கர நாற்காலியை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் பணம் தந்தால் மட்டுமே தருவதாகக் கூறி, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது தந்தையை காளிதாஸின் தோளில் சுமந்து அழைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மருத்துவமனையில் போதிய சக்கர நாற்காலிகள் இருப்பதாகவும், ஊழியர்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விசாரணை நடத்திய மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்களான எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில், வீல்சேர் கிடைக்காததால், மகன் தனது தந்தையை தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது 84 வயது தந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த காளிதாஸ், வீல்சேர் கேட்டபோது ஊழியர்கள் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, “வீடியோ தொடர்பாக விசாரணை நடக்கிறது. மருத்துவமனையில் போதுமான வீல்சேர்கள் உள்ளன. பணம் கேட்டதற்கான ஆதாரம் இல்லை,” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *