கோவை உடன்பிறப்புகள் Vs கரூர் கம்பெனி; திமுகவில் உச்சகட்ட மோதல்! செந்தில் பாலாஜி திட்டத்தில் டிவிஸ்ட் | Coimbatore DMK members clash with Senthil Balaji’s Karur team

Spread the love

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை  தக்க வைத்து, ஏழாவது முறை அரியணை ஏறுவதற்கு திமுக காய் நகர்த்தி வருகிறது.

கடந்த காலங்களில் கோட்டை விட்ட கொங்கு மண்டலத்தில், இந்தமுறை வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கோவையில் பிப்ரவரி 22, 27 என 5 நாள்களில் 2 மாநாடுகளுக்கு திட்டமிட்டுள்ளார்.

என்ன செய்தாலும் திமுக உள் கட்சி பஞ்சாயத்துகள் ஓய்ந்தபாடில்லை. கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்கள் தான் கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மேற்பார்வை செய்தனர்.

கோவை திமுக

கோவை திமுக

அவர்களின் கண் அசைவில் தான் தேர்தல் பணிகள் நடந்தன. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலையொட்டியும் கரூர் கம்பெனி கோவையில் களமிறங்கிவிட்டனர். கோவை திமுகவில் தற்போது பூத் வாரியாக தரவுகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு பூத்துக்கும் செந்தில் பாலாஜி ஒரு மஞ்சள் நிற நோட் கொடுத்துள்ளார். அதில் அந்த பூத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண், பெண் வயது என குடும்பம் வாரியாக பிரித்து எழுதுகிறார்கள். 18-30 வயது, 31-50 வயது, 51 – 80 வயது என்று பிரித்து எழுத வேண்டும். குடும்பம் வாரியாக ரேஷன் அட்டை எண், மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறார்களா என்பதையும் பதிவு செய்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களின் விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *