கோவை – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்

1758683112 dinamani2Fimport2F20162F112F182Foriginal2Ftrain
Spread the love

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை – சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06034) செப்.28, அக்.5, 12 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் – கோவை சிறப்பு ரயில் (எண்: 06033) செப்.29, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.24) முதல் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *