கோவை – சென்னை விரைவு ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்

Dinamani2fimport2f20212f12f252foriginal2frailway.jpeg
Spread the love

கோவை – சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை – சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.20-க்கும், மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் – கோவை இடையே பிற்பகல் 2.35-க்கும் புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும். அதுபோல் அசோகபுரம் (மைசூரு) – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பக் விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *