கோவை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்கம் | Festival Special Trains Run to Coimbatore, Tuticorin, Nagercoil

1322319.jpg
Spread the love

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதன்படி, கோவை – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06171) கோவையில் இருந்து இன்று (6-ம் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நாளை (7-ம் தேதி) காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06172) சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு புறப்டடு அதேநாள் மாலை 6 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இதேபோல், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06178) வரும் 9ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06179) 10ம் தேதி நாகர்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதேபோல் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில் (06186 ) நாளை மறுதினம் (8-ம்தேதி) இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06187) தூத்துக்குடியில் இருந்து 9-ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும், திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வரும் 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (06190) திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06191) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – ரேணிகுண்டா இடையே மெமூ மின்சார ரயில்இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை5.45 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும். ரேணி குண்டாவில் இருந்து மாலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *