கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: துணை ஜெயிலர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் | 4 people including deputy jailer suspended over Death of prisoner in Coimbatore Central Jail issue

1348816.jpg
Spread the love

கோவை: கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் துணை ஜெயிலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் காரையிறுப்பு பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் என்ற தாஸ் (33). இவர், திருப்பூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் இவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மதியம் சிறையில் 8-வது பிளாக்கில் உள்ள கழிவறைக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த காவலர்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, யேசுதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.

அவரது கழுத்து பகுதியில் எலும்பு உடைந்திருந்ததும், அதனால் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவர் கீழே விழுந்ததில் தரையில் இருந்த ஏதாவது பொருள் பட்டு அவரது கழுத்து எலும்பு முறிந்ததா? அல்லது சிறையில் சக கைதிகள் அல்லது வேறு யாராவது தாக்கியதால் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற நாளில் 8-வது பிளாக்கில் பணியில் இருந்த துணை ஜெயிலர் மனோரஞ்சிதம், உதவிசிறை அலுவலர் விஜயராஜ், சிறை தலைமை காவலர் பாபுராஜ், சிறை காவலர் தினேஷ் ஆகியோரை இன்று (ஜன.29) பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *