கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேச்சு | DMDK Premalatha Vijayakanth Comments on Coimbatore Student Rape Case

Spread the love

இந்நிலையில் இன்று கோவை சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்துப் பேசுகையில்,

“டாஸ்மாக், போதை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.

இந்தக் கொடுமையான சூழலில் யாரையும் நம்பாமல் பெண்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு, பெற்றோர்கள், காவல்துறை என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மைப் பாதுகாக்க மாட்டார்கள். எதாவது நடந்தால் நமது வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.

பெண்கள் சக்தியின் ரூபம். நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.”

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

நானும் ஒரு பெண் என்பதால் உரிமையுடன் சொல்கிறேன்: தனியாக யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்லாதீர்கள்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி இரவில் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்? நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“என்றைக்கும் ஒரு பெண் தனியாக இரவில் செல்கிறாரோ, அன்றைக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்” என்று காந்தியடிகள் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன.

நாம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாறும் வரை, பெண்களாகிய நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,” என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *