கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை – விசாரணையில் பகீர் தகவல்

Spread the love

கோவை விமான நிலையம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கடந்த நவம்பர் 2-ம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடே அதிர்ந்த இந்த வழக்கில், 

கோவை மாணவி வழக்கு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால், அவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவர். கொலை, திருட்டு, வழிப்பறி, அடிதடி போதை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளன. அவர்களை காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்தபோது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாள், அந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பு, 3 பேரும் அன்னூர் அருகே செரையாம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேவராஜ் என்பவரின் ஆட்டு பண்ணை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனால் 3 பேரையும் தேவராஜ் கண்டித்துள்ளார். அப்போது தேவராஜை கட்டையால் தாக்கி சென்றுள்ளனர். நவம்பர் 6-ம் தேதி கோவில்பாளையம் அருகே தேவராஜின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

கொலை
கொலை

அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரையும் கஸ்ட்டியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *