கோவை விமான நிலையத்தில் மோதல்: காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு | complaint against mayura jeyakumar

1340820.jpg
Spread the love

விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரளாவில் இருந்து கோவை வழியாக புதுடெல்லி செல்வதற்காக கடந்த 17-ம் தேதி கோவை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவரை வழியனுப்ப, தேசிய செயலாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளும், ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் கோவை செல்வன் தலைமையிலான நிர்வாகிகளும் வந்திருந்தனர். அப்போது, கோவை செல்வன் தரப்பிலான காங்கிரஸ் நிர்வாகிகள், மயூரா ஜெயக்குமார் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து, பொதுச் செயலாளர் வேணுகோபாலிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இரு தரப்பினரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். அப்போது மயூரா ஜெயக்குமார் மிரட்டல் விடுத்து பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் இரு தரப்பினரையும் பிரித்து, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, இதுகுறித்து கோவை செல்வன் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மயூரா ஜெயக்குமார், அவருடன் வந்த நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது பீளமேடு போலீஸார், அவதூறாகப் பேசுதால், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *