கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளை
கொள்ளை

இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகரின் மையப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்ட 3 பேரும் குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்தனர். குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமனிய பாத்திர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சரவணசுந்தர்
சரவணசுந்தர்

இவர்கள் 3 பேரும் துணி வியாபாரம் செய்வதாகக் கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுடன் தங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் 3 பேரும் அடுக்குமாடி குடியிருப்புகளைக் குறி வைத்து தேடிவந்துள்ளனர். கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக வீடுகள் இருப்பதால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

அன்றைய தினம் முழுவதும் அவர்கள் ஆட்டோவில் பயணித்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் காவலரைத் தாக்கியதால், தற்காப்புக்காக அவர்களைச் சுட்டுப் பிடித்துள்ளோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *