கோ-சிஸ்டருக்குத்தான் முக்கியமா? நான் இந்த குடும்பத்தில் எங்க? | Relationship Advice Tamil

Spread the love

அதே நேரத்தில், சில விஷயங்களில் மெதுவாக எல்லைகள் அமைக்கலாம். எல்லா முடிவுகளிலும் நீங்கள் தவிர்க்கப்படுகிறீர்கள் என்றால், “இதில் என் கருத்தையும் கேட்கலாம்” என்று சொல்ல ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் அது ஏற்கப்படாமல் இருந்தாலும், உங்கள் இருப்பை -ஐ பதிவு செய்யும் ஒரு வழியாக அது இருக்கும். சமையல் போன்ற விஷயங்களில், ‘ நாளை இதை சமைக்கலாமா?” என்று கேட்பதற்கு பதிலாக ‘இதை சமைத்து விடுகிறேன்’ என்று உங்கள் முடிவுகளை பதிய வைக்கலாம்.

முக்கியமாக, co-sister-ஐ போட்டியாளியாக பார்க்க வேண்டாம். இந்த நிலைமையை ஒரு போட்டியாக எடுத்துக்கொண்டால், அது உங்களின் மன அமைதியை மேலும் குலைக்கும். இது ஒரு உறவு பிரச்னை… போட்டி அல்ல.

`பேசும் மனசு

`பேசும் மனசு

மேலும், உங்கள் வாழ்க்கையை முழுவதும் இந்த குடும்ப சூழலுடன் மட்டும் இணைத்து விடாதீர்கள். உங்கள் நண்பர்கள், உங்கள் விருப்பங்கள், உங்கள் தனிப்பட்ட முன்னேற்றம் இவைகளில் கவனம் செலுத்துவது உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும். அது இந்த மாதிரியான சூழல்களை சமாளிக்க உளவியல் வலிமையை தரும்.

எல்லாவற்றிற்குப் பிறகும், சூழல் மாறாமல் தொடர்ந்தால், குடும்பத்தில் தெளிவான மாற்றம் வரவில்லை என்றால், தம்பதியர் சில மாதங்கள் தனியாக இருக்க திட்டமிடலாம். சில சமயம் பிசிக்கல் ஸ்பேஸ்  கூட எமோஷனல் ஸ்பேஸ்க்கு உதவும். 

இது ஒரு சிறிய பிரச்னைதான். பதட்டம் அடையாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்…நிச்சயம் மீண்டு வரலாம்” என்று விளக்கினார்.

ஆல் தி பெஸ்ட்!

___________________________________

வாசகர்களே இந்தப் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ‘பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *