க்ரீன் ஃபிளாக் vs ரெட் ஃபிளாக்: உங்கள் துணை யார்?|Green Flag or Red Flag? This Checklist Will Save Your Love Life

Spread the love

> அவ மரியாதை

தனிமையிலும் சரி… பொது இடங்களிலும் சரி… உங்களை நாகரிகமாக நடத்தாமல் இருப்பது, உங்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, அவர்களுடைய வீரத்தை நம் மீது காட்டுவது எல்லாமே அவ மரியாதையின் வகைகள்.

காதலிக்கும் போதே, இந்தப் பண்புகள் இருந்தால் உஷாராகி விட வேண்டும். இவற்றை ஆரம்பத்தில் உதாசீனப்படுத்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், ரிஸ்க் தான்.

> மௌனமாகப் புறக்கணிப்பது

எத்தனை ஆண்டுகள் காதலித்தாலும், எவ்வளவு துணையைப் பற்றி புரிந்து வைத்திருந்தாலும் சண்டை தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் சண்டைகள் உறவை வலுப்படுத்தும்.

அதனால், ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் சின்ன அளாவளாவல் இருக்க வேண்டும். அதை விடுத்து மௌனமாகச் சூழலைத் தவிர்ப்பது… புறக்கணிப்பது உறவுகளில் பயங்கர விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

> கருத்துப் பகிர்தல்

காதலர்கள் இருவரும் வேறு வேறு தொட்டியில் பூத்த மலர்கள். கருத்து வேறுபாடு மிக இயல்பு.

ஆனால், அந்த மாறுபடும், வேறுபடும் கருத்தை துணையிடம் பகிர்ந்துகொள்ளும் ஸ்பேஸ் கட்டாயம் வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும்.

இந்தக் குணநலன்கள் இருந்தால், அந்த உறவு வேண்டாம்… அமைதியாக விலகிவிடுங்கள்.

அப்புறம் மக்களே… உங்கள் துணையிடம் மட்டும் க்ரீன் ஃபிளாக் குணநலன்களை எதிர்பார்க்காமல் நீங்களும் அப்படி இருப்பது அவசியம். கட்டாயம் உங்களுக்குள் இருக்கும் ரெட் ஃபிளாக்குகளை விலக்கி விடுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *