சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சென்னை விமான நிலையத்தின் 4-வது முனையத்தின் பிரதான லாபியிலிருந்து (Main Lobby) வெளியேறி சாலைக்கு வரும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
விமான நிலைய மேலாளரோ, இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ யாரும் இந்த துர்நாற்றத்தை கவனிக்கவில்லையா? இது எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.