அவரிடம் நடத்திய விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நானும் உமாவும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் அவர், இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசிப் பழகி வந்ததால், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. சமாதானம் செய்யவே அவரை வரச்சொன்னேன். ஆனால், அவர் உடன்படவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கினார்.

உடனே 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால், அவரை பரிசோதித்த நர்ஸ், உமா இறந்துவிட்டாதாகக் கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் போலீஸில் சரணடைந்தேன்” எனக் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.