“சசிகலா குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி| “I did not speak to Amit Shah about Sasikala” – Edappadi Palaniswami interview

Spread the love

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும்.

சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *