ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் உடைந்த ஐபிஎல் வரலாறு: அதிக தொகைக்கு ஏலம்போன ரிஷப் பந்த்
சாதனை முறியடிப்பு
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 487 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100* ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை விராட் கோலி 7 சதங்கள் (இன்றைய சதத்தையும் சேர்த்து) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிக்க: 107*, 120*, 151… டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 10 சதங்கள் விளாசியுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.