இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும்.
பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை.
‘இந்த ஆப் வேண்டாம்’ என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது.

இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும்.
கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும்.
இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது.
சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.