சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர் தம்பதி: ஹாலிவுட்டில் நீடிக்கும் திகில் – யார் அந்த மர்ம நபர்?| Director couple found dead: The horror continues in Hollywood – who is the mysterious person?

Spread the love

“தி பிரின்சஸ் பிரைட்’, ‘திஸ் இஸ் ஸ்பைனல் டேப்’, ‘வென் ஹாரி மெட் சாலி’, ‘மிசரி’ மற்றும் ‘எ ஃபியூ குட் மென்’ போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர் மனைவி மிஷேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், பிரபலங்கள் வசிக்கும் பிரெண்ட்வுட் என்ற பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இந்தப் பகுதியிலிருந்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே காவல்துறையும், தீயணைப்புத் துறையும் அழைப்பு வந்த பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் இயக்குநர் ராப் ரெய்னரும், அவரின் மனைவி மிஷேலும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இயக்குநர் ராப் ரெய்னர்

இயக்குநர் ராப் ரெய்னர்

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், “லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் கொள்ளை மற்றும் கொலைப் பிரிவு துப்பறிவாளர்கள் அந்த வீட்டிற்குச் சென்று, கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.” என்றார்.

ராப் ரெய்னரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், “மிஷேல் மற்றும் ராப் ரெய்னரின் துயர மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *