சட்டசபைக்கு வராத மு.க.ஸ்டாலின்-எடப்பாடி கடும் தாக்கு

1268132
Spread the love

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தினந்தோறும் பலிஎண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 100&க்கும்மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

இதற்கு அ.தி.மு.க.,பா.ஜனதா, தே.மு.தி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியில் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தி.மு.க.அரசை கண்டித்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியபோது அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர்.

Rb

குண்டுகட்டாக வெளியேற்றம்

மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அ.தி.மு.க.வினர் குண்டு கட்டாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் மீது தாக்கு

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் “ஜனநாயக மாண்பு காப்பாளர்” என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

ஓடி ஒளியவில்லை

அ.இ.அ.தி.மு.க.வினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று விடியா திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த விடியா திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது.

ஸ்டாலின் தான் பொறுப்பு

எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான். மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து “நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்” என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம்.
மக்கள் நலன் ஒன்றே அ.தி.மு.க.வி-ன் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம்.18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றி பேச தி.மு.க.விற்கு எந்த அருகதையும் இல்லை.

பதவியை ராஜினாமா செய்யுங்கள்.

நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *