சட்டத்தால் மட்டும் சாதிய கொலைகளை தடுக்க முடியாது-மாரி செல்வராஜ்

Mariselvaraj
Spread the love

தமிழ்பட இயக்குனர் மாரி செல்வராஜ்தூதூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓடிடிடி தளம்

ஓ.டி.டி.யால் திரையரங்கில் வந்து படங்களைப் பார்க்கும் மக்கள் கூட்டம் குறைவில்லை. எல்லோர் வீட்டிலும் சாமி படம் உள்ளது. பூஜை அறை உள்ளது. ஆனாலும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது குறையவில்லை தானே. அப்படித்தான். சினிமா என்பது மக்களால் சேர்ந்து கூடிப் பார்ப்பது என்றும் அது மாறாது. அதன் மவுசு குறையாது.
தென் மாவட்டங்களில் சாதிக் கொலைகள் அதிகரித்துள்ளது. அடிப்படையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. நிறைய புரிதல்கள் தேவைப்படுகிறது. இளைஞர்களுக்குள்ளேயே விவாதங்கள் தேவைப்படுகிறது. அதை நோக்கி கலையை நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. உடனே இதனை மாற்றுவது சாத்தியமல்ல.

Mari Maamannan

சட்டம் போட்டால்

உடனே ஒரு சட்டம் போட்டால் மாற்றிவிடலாம் என்று சொல்கிறோம். அப்படியில்லை. உளவியலாக மிகவும் கெட்டிப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அரசியல், கலை என அனைத்து தளத்திலும் இணைந்து வேலை பார்த்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்சம் புரிதல் பெறும் என நினைக்கிறேன்.
அடுத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறேன்.அடுத்த கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்ததுமகிழ்ச்சியான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:நடிகர் பகத் பாசிலுக்கு இப்படி ஒரு பாதிப்பா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *