‘சட்டமன்றத்தில் நடந்த அந்த சம்பவம்!’ – ஓ.பி.எஸ்ஸின் கெடுவுக்கு எடப்பாடியின் மறைமுக பதில்! | Edappadi Palaniswami’s Indirect Reply to OPS Ultimatum Over Tamil Nadu Assembly Incident

Spread the love

இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஆலோசனையின் முடிவில் வைத்தியலிங்கம், “பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே கெடு. இல்லையேல் புதிய கட்சி ஆரம்பிப்போம்’ என அறிவித்தார்.

இதே சமயத்தில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்தார். கடந்த வாரத்தில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணித்து அமித்ஷாவையும் சந்தித்து வந்திருந்தார்.

இன்று பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும், ‘அதிமுக ஒருங்கிணைவதையே அனைவரும் விரும்புகின்றனர்’ என பேட்டி கொடுத்துச் சென்றார்.

இவற்றால்தான் அதிமுகவின் ஒருங்கிணைவு குறித்து பொதுக்குழுவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதாவது பேசப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எடப்பாடி புள்ளிவிவரங்களுடன் அடுக்கிய அவரின் உரையின் மூலம் ஓ.பி.எஸ் நோக்கி இன்னமும் க்ரீன் சிக்னலை கொடுக்க தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *