சட்டமன்ற தேர்தல் 10,175 பேர் விருப்பமனு: எடப்பாடிக்கு 2,187 மனுக்கள்: எம்ஜிஆர் மாளிகை தகவல் – Kumudam

Spread the love

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியி விரும்பும் நிர்வாகிகளிடம் கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகின்றன. அந்த வதையில் அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனுக்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்ச அறிக்கையில்: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர், , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்தார். 

இதன்படி கடந்த 15ம் தேதி முதல் சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், பெறப்பட்டது. முதற்கட்டமாக 23.12.2025 வரையில் பெறப்பட்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர். 31.12.2025 வரை காலநீட்டிப்பு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.  அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர்.   

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  `தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று  விருப்பம் தெரிவித்து’ 2,187 விருப்ப மனுக்களும் நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ளனர். மேலும்’, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆகமொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *