சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்! -இபிஎஸ்

Dinamani2f2024 11 132frykf9cju2fdoc1.jpg
Spread the love

முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மீது, கத்திக்குத்துச் சம்பவம் நடந்தது பேரதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த மருத்துவர் பாலாஜி

இதைக் கண்டித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த ஆட்சியின் தவறுகளை விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *