இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, “தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்” என ஜாலியாகத் தெரிவித்திருந்தார்.
கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.
இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
இதன் மூலம் 10 ஆண்டுகால ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டனை ஒரு வினோதமான சங்கடத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறார்.
ஜோ ரூட் சதம் அடித்தவுடன் ஹேய்டனின் மகள் நகைச்சுவையாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ரூட், நன்றி. நீங்கள் எங்கள் எல்லோரின் கண்களையும் காப்பாற்றிவிட்டீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வேடிக்கையான பதிவு சமூக ஊடங்களில் வைரலானது.