சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Dinamani2fimport2f20212f52f132foriginal2fnaxals 1498031540072808.jpg
Spread the love

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மாவட்ட ரிசர் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, மறைவான பகுதியிலிருந்து நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!

பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 197 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் கான்கெர் மற்றும் நாரயண்பூர் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. இங்கு, பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *