திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் நடை செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் முதல் மூடப்படும்.
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.