‘சந்தை நடக்கும் நாள் மாற்றம்; திருட்டு ஆடுகளை விற்க ஏற்பாடு?’ – போராட்டத்தில் குதித்த வி.சி.க-வினர் | Trichy market, arrangements to sell stolen sheep? – vck protest

Spread the love

மேலும், இதுபற்றி பேசிய ஆடு வளர்ப்பவர்கள் சிலர்,

“சீட்டு வசூல் என்ற பெயரில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் ஆட்டிற்கு ரூ. 80 என  வசூல் செய்யப்படுகிறது. அதே ஆட்டை வியாபாரிகள் வாங்கிகொண்டு வெளியே செல்பவர்களிடம் ரூ. 80 -ம் வசூல் செய்யப்படுகிறது.

மேலும், சந்தைக்கு ஆடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்வதோடு, இதற்கு முறையான ரசீதும் வழங்கப்படுவதும் இல்லை. ஆனால், இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை.

முக்கியமாக, கழிப்பறை, மின் விளக்குகள், சாலை வசதி குடிநீர் வசதியும் இல்லை.

வழக்கமான நடைமுறையை மாற்றி முதல்நாள் இரவில் ஆடுகளை விற்பனை செய்ய காரணமே, திருட்டு ஆடுகளை கொண்டு வருபவர்கள் ஈஸியாக ஆடுகளை விற்க வேண்டும் என்று என்பதற்காகத்தான்.

அதற்காக, திருட்டு ஆடுகளை விற்பவர்கள் அவர்களை கவனிப்பதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் சனிக்கிழமை காலையில் இருந்து ஆட்டுச் சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *