“சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி விரைவில் சிறைக்குச் செல்வார்” – ஹெச்.ராஜா | for speaking Sanatana dharma Udhayanidhi will go to jail h Raja

1348221.jpg
Spread the love

பழநி: “சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்” என்று பழநியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.24) மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி. திருப்பரங்குன்றம் மலையின் படிகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டவர்களை அரசு எப்படி அனுமதித்தது? சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகனுக்கு வந்த சோதனையாக, பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு என்ற அறிவிப்பு கண்டனத்துக்கு உரியது. கட்சி மாநாட்டின்போது உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறப்படுகிறதா? கோயில் சொத்தை காப்பாற்ற முடியாதவர்கள், அன்னதானம் வழங்க அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுவீர்களா? நானே அன்னதானம் வழங்குவேன். பழநி முருகன் கோயிலில் உட்பிரகாரத்தில் போட்டோ விற்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ‘திமுக வளர்கிறதா?’ என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரிந்துவிடும். சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் வழக்கு உள்ளது. விரைவில் அவர் சிறைக்கு செல்வார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 6 போலீஸ்காரர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல் துறையின் 50 சதவீதம் ஈரல் அழுகி விட்டதாக கூறியிருக்கிறார். தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவல் துறையின் ஈரல் 100 சதவீதம் அழுகிவிட்டது. எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பதற்கே அருகதையற்றது. நமது நாட்டில் வக்பு வாரிய சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டுவர உள்ளது” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *