உச்சிஷ்ட கணபதியை தாந்திரிக கணபதி என்றும் சொல்வார்கள். இவரை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை கூடும். தொடங்கும் செயல்கள் நன்மையாக முடியும். எனவே இவரை வழிபட சிறப்பு ஹோம வழிபாடுகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு ஹோமம் ஒன்றையும் சனிப்பெயர்ச்சி நாளில் செய்ய இருக்கிறோம்.
மேலும் விசித்ர வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹோமம் ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. இதில் சங்கல்பம் செய்துகொண்டால் மனபயம் விலகுவதோடு ஆரோக்கியமும் மேம்படும் என்கிறார்கள். மேலும் சிறப்பு நவகிரக ஹோமமும் நடைபெற இருக்கிறது. சனிபகவானுக்கு ப்ரீதியாக 330 சிறப்பு ஆவர்த்திகள் சொல்லி ஹோமம் நடைபெறும்.

இந்த ஹோமங்களை எல்லாம் வாராஹி குருஜி ஸ்ரீவாராஹி மைந்தன் முன்னின்று நடத்த இருக்கிறார். வேத விற்பனர்களைக் கொண்டு நடத்தப்பட இருக்கும் இந்த ஹோமத்தைத் தரிசனம் செய்வதும் அதில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்வதும் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படருக்கிறது.
சனிபகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகாலங்கள் மீன ராசியில் சஞ்சாரம் செய்வார். அப்போது சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும் கன்னி ராசிக்கு கண்டக சனியும் தனுசு ராசிக்கு அர்த்திராஷ்டம சனியும் நடைபெறும். துலாம், விருச்சிகம், ரிஷபம், மிதுனம், கடகம், மகரம் ஆகிய ராசிகளுக்குச் சாதக பலன்கள் கிடைக்கும்.
எனவே 12 ராசிக்காரர்களுக்கும் சாதக பலன்கள் அதிகரிக்க இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பூஜை வைபவங்களில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பித்து வழிபட, சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.
இடம் : ஸ்ரீவாராஹி மந்திர பீடம், சித்தாத்தூர், வேடந்தாங்கல்
இந்தத் தலத்தில் 64 வாராஹி ரூபங்கள் பிரதிஷ்ட செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தரிசித்தாலே நமக்கு நற்பலன்கள் மிகுதியாகும். மேலும் 27 நட்சத்திர வாராஹிகளும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தலத்தில் மாண்டுக மகரிஷியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இத்தலத்தில் சிறப்பு ஹம் வழிபாடுகள் நடப்பதும் அதில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதும் மிகுந்த பலன்களைத் தரும்.
ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்ள ஆன்லைன் பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்