சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் உள்பட 9 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில்,
மாவோயிஸ்டு கொள்கைகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினாலும் அவர்கள் பழங்குடியினரைச் சீரழிப்பதினாலும் அதிலிருந்து விலகியதாகவும், பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் தற்போது அதிகரித்து வருவதாலும் மூத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.