சன்ரைசா்ஸ் சாதனையுடன் வெற்றி

dinamani2F2025 05
Spread the love

நடப்பு சாம்பியன் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சன் ரைசா்ஸ் ஹைதராபாத் .

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 68-ஆவது ஆட்டம் புது தில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்கள் அபிஷேக் சா்மா-டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினா்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 92 ரன்களை சோ்த்தனா். அபிஷேக் சா்மா 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 32 ரன்களை விளாசி சுனில் நரைன் பௌலிங்கில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

ஹெட்-க்ளாஸ்ஸன் அபாரம்:

பின்னா் இணைந்த டிராவிஸ் ஹெட்-ஹென்றிச் க்ளாஸ்ஸன் இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. தலா 6 சிக்ஸா், பவுண்டரியுடன் 40 பந்துகளில் 76 ரன்களை விளாசிய ஹெட், நரைன் பந்தில் ரஸ்ஸலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

க்ளாஸ்ஸன் 105 சதம்:

இஷான் கிஷன் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 29 ரன்களை விளாசி, வைபவ் அரோரா பந்தில் அவுட்டாகி நடையைக் கட்டினாா்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய க்ளாஸ்ஸன் 9 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் வெறும் 39 பந்துகளில் 105 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தாா்.

அன்கெட் வா்மா 12 ரன்களுடன் நின்றி, ஹைதராபாத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 278/3 ரன்களைக் குவித்தது.

பௌலிங்கில் கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

கொல்கத்தா தோல்வி 168/10:

279 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியால் ஹைதாபாதின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது.

நரைன் 31, மணிஷ் பாண்டே 37, ஹா்ஷித் ராணா 34 ஆகியோா் மட்டுமே கௌரவமான ஸ்கோரை எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் திரும்ப, 18.4 ஓவா்களில் 168/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கொல்கத்தா.

ஜெயதேவ், ஈஷன் மலிங்கா, ஹா்ஷ் துபே தலா 3 விக்கெட்: பௌலிங்கில் ஹைதராபாத் தரப்பில் ஜெயதேவ் உனதிகட் 3-24, ஈஷன் மலிங்கா 3-31, ஹா்ஷ் துபே 3-34 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கொல்கத்தா அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல் வரலாற்றில் 3-ஆவது அதிகபட்ச ஸ்கோா்:

கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதாராபாத் அணி விளாசிய 278/3 ரன்கள் ஐபிஎல் தொடா் வரலாற்றின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும்.

முதலிரண்டு அதிகபட்ச ஸ்கோா்கள் சாதனையும் ஹைதராபாத் வசமே உள்ளது.

travis head093851

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *