சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: சிறப்பு புலனாய்வுக் குழு வலையில் நடிகர் ஜெயராம்; வாக்குமூலம் என்ன? | Actor Jayaram caught in the special investigation team’s net; what was his statement?

Spread the love

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, ​​அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம்

அதில், “கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார்.

சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *