சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Shekar Babu informs 24 hour help centers for devotees going to Sabarimala

Spread the love

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​த​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை நவ.17 (நேற்​று) முதல் டிச.27-ம் தேதி வரை​யும், மகர​விளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. இதையொட்​டி, சபரிமலை செல்​லும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக, 24 மணி நேர​மும் இயங்​கும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அந்த வகை​யில், சென்​னை​யில் உள்ள இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள தகவல் மையத்தை 18004251757 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இரு மாநில எல்​லை​யான களியக்​கா​விளை​யில் உள்ள தகவல் மையத்தை 9488073779, 9486270443, 9442872911 ஆகிய எண்​களில் தொடர்பு கொண்டு தகவல் அறிய​லாம்.

சபரிமலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தகவல் மையத்தை நவ.17 முதல் டிச.2-ம் தேதி வரை 9443994342, 6385806900, 8531070571 ஆகிய எண்​களி​லும், டிச.3 முதல் 17-ம் தேதி வரை 8344021828, 7094906442, 7558839969 ஆகிய எண்​களி​லும்,டிச.18 முதல் 2026 ஜன.2-ம் தேதி வரை 8921937043, 9080650431, 9940576898 என்ற எண்​களி​லும், ஜன.3 முதல் 20-ம் தேதி வரை 9843370229, 9942505466, 8438444770 ஆகிய எண்​களி​லும் தொடர்பு கொண்டு தகவல்​களை அறிந்து கொள்​ளலாம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *