சபரிமலை தங்கக்கவச முறைகேடு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் – Kumudam

Spread the love

சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது குறித்து கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இரு வழக்குகளைப் பதிவு செய்து, கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவர், கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரைக் கைது செய்தது.

கேரள காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடர்பாக பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கடந்த 9-ஆம் தேதி பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உன்னிகிருஷ்ணனுடன் இருக்கும் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் ஜெயராமை அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *