சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்… 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

Spread the love

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

திருவாபரணம் யாத்திரை

திருவாபரணம் யாத்திரை

வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *